பல்வேறு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டம்…!!
இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.
இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார்.மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தில் மாநில ஆளுநர் நரசிம்மன், தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார்.
கேரள மாநில மாநில ஆளுநர் பி.சதாசிவம், திருவனந்தபுரத்தில் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி பின்னர் இராணுவ அணுவகுப்பு மாரியாதையை பெற்றுக் கொண்டார்.
கோவாவில் மாநில ஆளுநர் மிருதுலா சின்ஹா, தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
மத்திய பிரதேசத்தில் மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் திறந்த வாகனத்தில் சென்று முப்படை ராணுவ வீரர்களின் ராணுவ அணுவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஒடிசாவில் மாநில ஆளுநர் கணேசி லால் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார்.