தெலுங்கில் ஜானுவாக சமந்தா!! ராமசந்திரனாக யார்?! 96 தெலுங்கு அப்டேட்ஸ்!!!

தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி காதலித்தவர்க்ள், காதலிக்காதவர்கள் என அனைவரும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராம் – ஜானுவாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.

தற்போது இந்த படத்தை தற்போது தெலுங்கில் தயாரிக்க உள்ளனர். இதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார்.விஜய் சேதுபதி கேரக்டரில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஹீரோ சர்வானந்த் நடிக்க உள்ளார்..

இந்த படத்தில் பள்ளி பருவ காட்சிகள்.இல்லை அதற்கு பதிலாக கல்லூரி காட்சிகளில் சர்வானந்த், சமந்தா நடிக்க உள்ளனர். இந்த படத்தை பிரேம் குமாரே இயக்க உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment