10 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா…4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு….!!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றதில்தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமத்துவத்துக்கான இளைஞர் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.