ஆசிரியர்கள் போராட்டம்: விரைவில் நல்ல செய்தி வெளிவரும்-அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்றது.

முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு:

இன்று  முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு நடைபெற்றது.

பின்னர்  இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பள்ளிகள் மூடப்படுவதாக தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.ஏழை மாணவர்களின் நல​னை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் .ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்து விரைவில் நல்ல செய்தி வெளிவரும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest