மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்
சிரமத்தை அரசு சொல்லும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சிலரின் தூண்டுதலுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரையாக வேண்டாம். நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு தமிழக அரசை தள்ள வேண்டாம் .சிரமத்தை அரசு சொல்லும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.அரசின் நிதி நிலையால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.