காங்கிரசில் இணைந்த ஜெயலலிதாவின் தோழி…!இணைந்தவுடன் கட்சியில் முக்கிய பதவி
- ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம்
- சசிகலாவின் ஆதிக்கம்
- முதல்வர் பதவியை இழந்த ஓ.பன்னீர்செல்வம்
- அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று மீண்டும் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்
- காங்கிரசில் இணைந்த ஜெயலலிதாவின் தோழி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பள்ளி தோழியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானா பதர் சையத் காங்கிரசில் இணைந்தார்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம்:
கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார்.அதற்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றது.
சசிகலாவின் ஆதிக்கம்:
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
முதல்வர் பதவியை இழந்த ஓ.பன்னீர்செல்வம்:
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று மீண்டும் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்:
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.ஆனால் தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார்.தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
காங்கிரசில் இணைந்த ஜெயலலிதாவின் தோழி:
ஜெயலலிதாவின் தோழியும்,அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயீத், திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் பதர் சயீத் வக்பு வாரியத் தலைவர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், எஸ்.ஐ.இ.டி கல்லூரி இணைச் செயலாளர்ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விலகிய அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள பதர் சயீத்துக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.