காஞ்சிபுரம் : செய்யாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாகரல், கீழ்புதூர், வள்ளிமேடு, தம்மரஜபுரம், அங்கம்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, செய்யாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.