நான் சம்பாதிப்பதில் எனக்கு போக மற்றவர்களுக்கும் கொடுப்பேன் – கமல்ஹாசன் அதிரடி
நான் சம்பாதிப்பதில் எனக்கு போக மற்றவர்களுக்கும் கொடுப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,உங்கள் வயதில் நான் அரசியல் பேச தொடங்கியிருந்தால் ஸ்மார்ட் கிராமங்கள் உருவாகியிருக்கும். உங்கள் பிள்ளைகள் வாழப்போகும் தமிழகம் இது, தமிழகத்திற்கு கைகொடுத்து தூக்கிவிடுங்கள். வேட்டி கட்டி கோஷமிட்டு உண்டியல் குலுக்குவதல்ல அரசியல். அது நாமே ஏற்படுத்திக்கொள்வது அரசியலில் யாரும் சேவை செய்ய வேண்டாம். தேவையான சம்பளம் தரப்படுகிறது. அதற்கு மேல் எடுத்தால் திருட்டு.
மற்றவர்களைப் போல் தொழிலை விட்டுவிட்டு கஜானாவை சுரண்டுபவன் நானல்ல.நான் சம்பாதிப்பதில் எனக்கு போக மற்றவர்களுக்கும் கொடுப்பேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
பணத்தை அதிகமாக வைத்திருப்பவன் முட்டாள்; பணம் என்பது எப்போதும் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் நல்ல கரங்கள் வரும்போது கை கொடுக்க வேண்டும். நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.