பிரபல சீரியல் நடிகை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் !!!
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘ ராஜா ராணி ‘ இந்த சீரியலில் வில்லியாக தற்போது ஸ்ரீ தேவி நடித்துவருகிறார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல சீரியல்களில் தற்போது இவர் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியாளர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து போட்டியிடுகிறார்கள். இவர் ‘உழைக்கும் கரங்கள்’ அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிட இருக்கிறார்.