வெற்றிபெறப்போவது யார்? இந்தியா – நியுஸிலாந்து 2வது ஒருநாள் போட்டிக் கணிப்பு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை ஏழு முப்பது மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றறு தொடரில் மேலும் முன்னிலை பெற முயற்சிக்கும்.
நியுஸி நாட்டைப் பொருத்தவரை சொந்த மண் என்பதால் முதல் போட்டியில் தோற்று விட்டு இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஆக்ரோஷமாக இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்திய வீரர்கள் உச்சக்கட்டத்தில் ஆடி கொண்டிருப்பதால் இந்த போட்டியில் இந்தியா வெல்லும் என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் நம்பிக்கையாக உள்ளது.