ஸ்டெர்லைட் வழக்கு 29ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது….!!
ஸ்டெர்லைட்_டை வழக்கு வருகின்ற 29ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த மனு மீது இன்று விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறைவேற்ற கூறிய நிபந்தனைகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இதையடுத்து இன்று
ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து.