சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு!!!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருக்கு தமிழ் சினிமாவில் தனெக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக சீமராஜா திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து சிவா அடுத்ததாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்க வைக்க புதுமுக நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கவும், பள்ளி கல்லூரி மாணவ மனைவிகளும் தேவைபடுகின்றனர். அவர்கள் தங்கள் ப்ரோபைலை என்கிற இ-மெயில்க்கு அனுப்பி வைக்குமாறு படக்குழு தெரிவித்துள்ளது.
DINASUVADU