கேரள சட்ட சபை கூட்டம் இன்று தொடங்குகிறது….!!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கேரள மாநில சட்டசபை கூடுகிறது.
இன்று கேரளாவில் நடைபெற இருக்கும் சட்ட சபை கூட்ட்டத்தொடரில் கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகின்றது. இந்நிலையிலில் சபரிமலையில் பெண்கள் அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குறித்து பேச எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றனர் .
இன்று நடைபெறும் சட்டசபை கொட்டத்தை அம்மாநில ஆளுநர் சதாசிவம் கூட்டத் தொடரை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.வருகின்ற 31ம் தேதி கேரள மாநில பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தாக்கல் செய்கிறார். இந்த சட்டசபை கூட்டத்தொடர் வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கும் எனத் தெரிகிறது.