கொழும்பு ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு:ஊழல் வழக்கில் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டு சிறை..!
முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் செயலாளராக பதவி வகித்த லலித் வீரதுங்கா, தொலை தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனர் அனுஷா பால்பிட்டா ஆகிய 2 பேரும், அரசு பணத்தை 2015–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை கொழும்பு ஐகோர்ட்டு விசாரித்தது.விசாரணை முடிவில் 2 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.52 மில்லியன் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பு, ராஜபக்சே காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகளில் வந்துள்ள முதல் தீர்ப்பு ஆகும்