2 மணி நேரத்தில் 4.5 கிலோ எடை குறைந்த ஆஸ்திரேலிய இளம் வீரர்!!!
ஆசிய நாடுகளுக்கு விளையாட செல்லும்போது அவர்கள் வெப்பத்தை தணிக்க முடியாமல் உடல் அளவில் பெரும் சிரமத்திற்கு ஆளாவது வழக்கமான ஒன்று. தற்போது வங்காள தேசத்தின் தலைநகரான சிட்டகாங்கில் அதிக வெப்பம் நிலவி வருவதால் ஆஸ்திரேலிய வீரர்களால் வெப்பத்தை தாங்க முடியவில்லை.
அதிக வெப்பத்தின் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் வெப்பத்தை தாங்க முடியாமல் 4.5 கிலோ எடையை இழந்துள்ளார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் ஹேண்ட்ஸ்காம்ப் பேட்டிங் செய்தார்.113 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். வங்காள தேசத்தின் சுழற்பந்துகளை லாவகமாக சமாளித்த ஹேண்ட்ஸ்காம்பால் வெப்பத்தை சமாளிக்க முடியவில்லை.
அவரது உடல் வியர்வையால் நனைந்தது. அடிக்கடி ஐஸ் கட்டி பேக் வைத்து வெப்பத்தை தணிக்க முயற்சித்தார் இருந்தாலும் முடியவில்லை.இரண்டரை மணி நேரம் வெயிலில் நின்று விளையாடியதன் காரணமாக அவரது எடையில் 4.5 கிலோ குறைந்துள்ளது.