2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு:ரூ.3.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு
2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாளான 24ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
பின்னர் முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், 2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.ரூ.3.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.