பறிபோன குக்கர்!!! உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும்- தினகரன் நம்பிக்கை
- தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு
- உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
- தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது
- உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும்
குக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு:
டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.,மதுசூதனன் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை:
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு:
பின் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு:
இனிவரும் தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது:
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில்,டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது.அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்று பதில் அளித்தது.
தினகரன் நமபிக்கை:
இந்நிலையில் குக்கர் சின்ன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.