நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்..!
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதனை போல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.இதில் 4 நாளான 15 தேதி அன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.பின்னர் 21 தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
சுவாமி எழுந்தருளிய தெப்பக்குளத்தில் தண்ணீரானது குறைவாக இருந்ததால் தெப்பத்தை சுற்றி வராமல் பக்தர்களுக்கு சுவாமி மற்றும் அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இந்த அற்புதமான நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.