இளம் வயதில் முகத்தில் விழும் சுருக்கத்தை தடுக்க சில வழிகள்…!!!
இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதை காணலாம். இதற்கு காரணம் ” பாஸ்ட் புட்” உணவு வகைகளை இவர்கள் அதிகமுன்பதுதான் என கூறப்படுகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது முகத்தில் சுருக்கம் ஏற்படுவதில் இருந்து விடுதலை பெறலாம்.
காய்கறி மற்றும் பழவகைகள் :
காய்கறி பழ வகைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இயற்கையான காய்கறிகள், பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தொழில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க கூடியவை. வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.
வாழைப்பழம் :
துவர்ப்பு சுவை இளைமைக்கு பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
வெந்தயக்கீரை :
வெந்தயக்கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
எண்ணெய் :
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்து கழுவ வேண்டும் இதனை தினமும் செய்யலாம். அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.