தேயிலை புற்றுநோயை குணப்படுத்துமா….?
இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீக முறையால் பலவிதமான நோய்கள் பரவி வருகிறது. அதில் மிகவும் பயங்கரமான நோய்களில் ஒன்று. புற்று நோய் அழிப்பதற்கு பல மருந்துகள் இருந்தாலும், இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நோயை நாம் செயற்கையான முறையில் குணப்படுத்துவதை விட இயற்கையான முறையில் குணப்படுத்துவது மிகச் சிறந்தது.
இந்த புற்றுநோயை தேயிலை மூலம் இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். தேயிலையின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
நுரையீரல் புற்றுநோய் :
தேயிலையில் உள்ள நானோ துகள்கள் மற்றும் சில வேதிப் பொருட்களின் சேர்க்கையின் மூலம் குவாண்டம் துகள்களை உருவாக்கி அதன்மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை 80% அளவுக்கு அழிக்க முடியும் என்று இந்தியா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
குவாண்டம் துகள்கள் :
குவாண்டம் துகள்களைக் கொண்டு நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும். இந்தத் துகள்களை செயற்கையாக உருவாக்க பொருளாதாரரீதியாக அதிக செலவு ஆகும். அதேநேரத்தில் அதில் பக்க விளைவுகளும் அதிகம்.
இந்த நிலையில் தேயிலையில் உள்ள இயற்கையான நானோ துகள்களில் சில வேதிப்பொருட்களைச் சேர்த்து இயற்கையான முறையில் குவாண்டம் துகள்களை உருவாக்க முடியும் என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.