சசிகலா-நடராஜன் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் : ஜெவின் அண்ணன்
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் எனகூறி ஜெவின் மகள் என அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர வலியுறித்து தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை பற்றி ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறும்போது ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான், அது யாரென்று தெரியவில்லை ஒருவேளை அது அம்ருதாவாக இருக்கலாம் என கூறி ஜெயலிதாவிற்கு மகள் பிறந்ததை கூறி பரபரப்பை அதிகபடுத்தினார்.
இந்நிலையில் தற்போது, ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் என்பவர் இது உண்மைதான் என கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘ஜெயலலிதா என் தந்தையின் இன்னொரு மனைவி வேதம்மாள் எ சந்தியா அவரின் குழந்தைகள் தான் ஜெயகுமார், ஜெயலலிதா. ஆகவே எனக்கு ஜெயலலிதா தங்கை முறைஆகும். அதன் பின் ஜெவின் அம்மா விவாகரத்து வாங்கிகொண்டு சென்றனர். அதன்பின் சந்தியா, சினிமா கலை இயக்குனர் தாமோதரப்பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு சைலஜா என்றபென் குழந்தை பிறந்தது. ஆனால் சைலஜாவை சந்திக்கமுடியவில்லை பிறகு வெகு நாள் கழித்து சைலஜாவும், மகள் அம்ருதாவும் என்னை சந்தித்து பேசினர். பிறகு சைலஜாவும் அவரதுகணவரும் இறந்து விட்டனர். பிறகு அம்ருதா என்னை சந்தித்தார், அப்போது தான் ஜெயலலிதா மகள் என கூறினனார்.
ஜெயலலிதாவிற்கும் நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பென் குழந்தை பிறந்ததாகவும் அந்தகுழந்தை வெளிநாட்டில் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டதாகவும் கேள்விபட்டேன், இது பற்றி அனைத்து உண்மைகளும் சசிகலா மற்றும் நடராஜனுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் தான் மற்றவர்களுக்கு கூறவேண்டும்.’ இவ்வாறு அவர் கூறினார்.