இருமல் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா…? இதோ.. அதிலிருந்து விடுதலை பெற சில வழிகள்….!!!
குளிர்காலம் வந்துவிட்டாலே, பல நோய்களை நம்மை மாறி மாறி தாக்குகின்றனர். எவ்வளவு தான் பக்குவமாக இருந்தாலும் நோய்கள் நம்மை தாக்கத்தால் செய்கின்றது. இந்த பனிக்காலங்களில் முக்கியமாக தாக்கும் நோய்களில் ஒன்று தான் இருமல் இந்த இருமலில் இருந்து விடுதலை அடைய சில வழிகள் பற்றி பார்ப்போம்.
நீர்ச்சத்துடன் இருங்கள் :
குளிக்கலாம் என்றாலே வறண்ட காலமாகும். அதனால் இருமலை நீக்க வேண்டுமென்றால், அதிகமான அளவில் வெந்நீரையும், இதர பானங்களையும் குடிக்க வேண்டும். உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
தேன் :
தேன் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய மிக சிறந்த மருந்து. தென் என்பது தொண்டைவலியை குணப்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இருமலில் இருந்து இது உடனடி நிவாரணத்தை பெற உதவுகிறது.
வெந்நீர் குளியல் :
இருமலுக்கான உடனடி வீட்டு சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும். வெந்நீரில் குளியல் போட்டால் உடல் கழிவுகள் வெளியேறுவது சுலபமாகும். இதனால் சளிக்கு மட்டுமல்லாது அலர்ஜிகள் மற்றும் ஆஸ்துமாவால் ஏற்படும் இருமலுக்கும் அது நிவாரணத்தை அளிக்கும்.
உப்பு தண்ணீரை கொப்பளித்தல்:
இருமலை போக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகும். வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில் வாயை கொப்பளித்து உடனடி நிவாரணத்தை பெறலாம்.
மசாலா டீ :
மசாலா டீயில் பாலும், மஞ்சளும் கலக்கப்பட்டிருக்கும். இருமலை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். இது இயற்கையான சிகிச்சை என்பதால், இதனை பெரியவர்களும் குழந்தைகளும் பயன்படுத்தலாம்.
லவங்கப்பட்டை டீ :
கொதிக்க வைத்த தேனுடன் லவங்கம்பட்டை மற்றும் எலுமிச்சை சேர்த்து கொள்ள வேண்டும். இருமலை போக்க இந்த சாறு மிகவும் உதவிடும். சளியை குமைப்படுத்தவும் கூட இதை பயன்படுத்தலாம்.
உப்பு தண்ணீர் மற்றும் பூண்டு :
இருமலுக்கான மிக சிறந்த பழமையான வைத்தியம் இது. பூண்டுகளை நசுக்கி உப்பு தண்ணீருடன் சேர்த்து கொள்ள வேண்டும். மஞ்சள் என்பது தொற்றுகளுக்கு கிருமி நாசினிகளாக விளங்குவதால் அதையும் சேர்த்து கொள்ளலாம்.
நெல்லிக்காய் :
நெல்லிக்காய் பொதுவாக ஏற்படும் சளியை போக்க சிறந்த வழிகளில் ஒன்று தான் நெல்லிக்காய். வரும் முன் காப்பது தானே சிறந்தது. நெல்லிக்க்காய் என்பது நம் உடலை பாதுகாக்கும் கடுமையான நோய் எதிர்ப்பு பண்பேற்றியாக விளங்கும்.