ஏழைத்தாயின் மகன் என கூறும் மோடி செய்யக்கூடிய வேலையா இது? மு.க.ஸ்டாலின்
பாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகி என்றால் அந்த பட்டத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும். ஆனால் தேசத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களால் ஆபத்து வந்துள்ளதால் தேசம் காப்போம் மாநாடு.
ரஃபேல் ஒப்பந்த பேரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என ஆதாரத்துடன் பாஜக அரசு நிரூபிக்க வேண்டும் .பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் தவறு என கூறவில்லை. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூக நீதியை சீர்குலைக்கும்.
பாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகி என்றால் அந்த பட்டத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூக நீதியை சீர்குலைக்கும்.ஏழைத்தாயின் மகன் என கூறும் மோடி செய்யக்கூடிய வேலையா இது? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.