பேட்ட vs விஸ்வாசம் இரண்டு வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!!
இந்த வருட பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் வகஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், விஸ்வாசம் படத்தை சத்ய் ஜோதி பிலிம்ஸூம் தயாரித்திருந்தது. இந்த இரு படங்களும். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படங்கள் வெளியான புதிதில் இரு படங்களும் நல்ல வசூலை குவித்து வருகிறது. விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் (சென்னை தவிர) நல்ல வசூலையும், மற்ற இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் பேட்ட வசூலே அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு வார முடிவில் சென்னையில் பேட்ட படம் 12.73 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. அதேபோல விஸ்வாசம் திரைப்படம் 10.22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த வாரம் புதுபடங்கள் சில வந்தாலும் பெரும்பாலான பெரிய திரையரங்குகளில் இன்னும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள்தான் திரையிடப்படுமாம்.
DINASUVADU