ரெமோ பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க ஆட்கள் தேவை!!
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ரெமோ. இந்த படத்தை 24.ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி இருந்தது. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் என்ற புதிய இயக்குனர் இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை ஆக்ஷ்ன் பேக்காஜ்ஜாக உருவாக உள்ளது. இதில் நடிக்க நடிகர், நடிகைகள் புதுமுக நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 & 27ஆம் தேதி இந்த ஆடிஷன் நடக்க உள்ளது.
DINASUVADU