ஹுவாய் நிறுவன அதிகாரியை நாடு கடத்தும் கனடா…!!
ஹுவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் முயற்சியில் கனடா ஈடுபட்டு வருகின்றது.
கனடாவில் கைதான ஹுவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரி மெய்வாஸோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் கனடா நாடு முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது .
அமெரிக்கா விதித்த தடையை மீறி ஈரான்னுக்கு சில உபகரணங்களை ஹுவாய் நிறுவனம் விற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது .இந்த குற்றத்தின் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வான்குவா நகரில் தரையிறங்கிய ஹுவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரி மெய்வாஸோ_வை கனடா நாட்டு அரசு கைது செய்தது .
இந்நிலையில் கனடா நாட்டின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இரு கனடா நாட்டினரை சீனா சிறை பிடித்துள்ளது இந்நிலையில் மெய்வாஸோ_வை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்க்கான நடவடிக்கைள் முடுக்கிவிட பட்டுள்ளதாக அமெரிக்கா சட்ட அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் , சட்டத்தை நிலை நாட்ட கனடா அளித்து வரும் ஆதரவு பாராட்டதக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் மெய்வாஸோவை நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டுமென்று சீனா வலிறுத்தியுள்ளது .