காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி…!!
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள.குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் அதிக பாராளுமன்ற தொகுதியை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான நிர்வாகிகளை பாரதீய ஜனதா கட்சி நியமனம் செய்துள்ளது.
சுமார் 80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தியை நியமனம் செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி . மேலும் பிரியங்கா காந்தி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாக உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பகுதியை ஒதுக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.