சாதனை படைத்த தவான்-அதிவேகமாக 5000 ரன்கள் கடந்து சாதனை
இன்றைய ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் தவான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் இந்திய வீரர் தவான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது வேகமாக 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.இன்றைய ஒருநாள் போட்டியில் தனது 118-வது இன்னிங்ஸ்-ல் அவர் இந்த சாதனை படைத்துள்ளார்.இதன்மூலம் இந்திய வீரர்களில் அதிவேகமாக 5000 ரன்கள் கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 114 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டி முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் உலக அளவில் தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் அம்லா அதிவேகமாக 5000 ரன்களை 101 இன்னிங்ஸ்களில் கடந்து முதலிடத்தில் உள்ளார்.இந்திய அணி கேப்டன் விராட் கோலி 114 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
உலக அளவில் மேற்கிந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா 118 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்தார். அவரது சாதனையை தற்போது இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.