பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் கைது…!!

Default Image

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ_ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

  • 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 
  • இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்
  • கைது 

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:

Image result for ஜாக்டோ ஜியோ

எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு  செய்தது.

கைது : 

நேற்று முதல் இன்றும்  ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து இன்று பல்வேறு பகுதியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் , இரயில் மறியல் என போராட்டம் தொடர்ந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை ,  மன்னார்குடி , சேலம் , திருவாரூர், திருச்சி , காட்பாடி , வாணியம்பாடி , திருவண்ணாமலை வந்தவாசி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்களை காவல்துறையினர்கைது செய்து வருகின்றனர்.அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித்த வேண்டுமென தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest