இன்று நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு-குடியரசு துணைத்தலைவர் ,மத்திய அமைச்சர் பங்கேற்பு
- ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு
- புரிந்துணர்வு ஒப்பந்தம்
- குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை
உலக முதலீட்டாளர் மாநாட்டை துவக்கிவைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
பின் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை:
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தொழில்துறை அமைச்சர் சம்பத் சந்தித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்நிலையில் இருவரும் இன்று கலந்து கொள்ள உள்ளனர்.