ரெட் கார்டை தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலிருந்து அடுத்த பாடல் ரிலீஸ்!!
செக்கசிவந்த வானம் படத்தை தொட்ரந்து நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுந்தர.சி இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார். அதில் முதல் பாடலான ரெட் கார்டு என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வாங்க மச்சான் வாங்க என்ற பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது . இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU