பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம்! இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை!! RRR படத்தின் புதிய அப்டேட்!!
பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டு படங்கள் மூலம் இந்திய சினிமாவே மிரளும் வகையில் எடுத்து இருந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படங்களை தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி இந்திய சினிமா ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக RRR என்ற தலைப்பு வைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் பாகுபலி படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செம்கிறார். இந்த படத்தில் AlexaLF மற்றும் signature prime என்ற புதிய லென்ஸ்கள் கொண்ட கேமாராக்கள் உபயோகபடுத்தப்பட்டு படமாக்க்ப்படுகின்றன. இந்திய சினிமாவிலேயே இந்த படத்திற்குதான் இந்த புதிய லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அதனை ஒளிப்பதிவாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU