M.L.A_க்களுக்குள் அடிதடி…5 பிரிவுகளின் கீழ் வழக்கு…!!
கர்நாடக காங்கிரஸ் M.L.A_க்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் M.L.A கணேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து 8 மாதங்களாக ஆட்சி நடத்தி வருகின்றன. இரண்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு கருத்து வேறுபாடுகள்இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது . காங்கிரஸ் , மதச்சார்பற்ற என இரண்டு கட்சியை சார்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களையும் இழுக்க தங்கள் பக்கம் இழுக்க பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் பாஜக குதிரை பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சையால் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதில் M.L.A_க்கள் ஆனந்த் சிங், கணேஷ் ஆகியோர் மோதிக் கொண்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் கணேஷ் மீது கொலை முயற்சி உள்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.