முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா…? அப்ப இதை செய்து பாருங்க….!!!

Default Image

பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளுள் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளுக்கு உடனடி தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா. அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை வேரோடு வெளியேற்றி, இறந்த செல்களையும் நீக்கி விடும்.

செய்முறை-1 :

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்ததும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ வேண்டும்.

Image result for பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர்

செய்முறை-2:

 

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்ந்து கலந்து, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு இப்பிரச்சனை அதிகம் இருந்தால், வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.

Related image

 

செய்முறை-3:

பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வர, எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம் விரைவில் கரும்புள்ளிகள் வெளியேற செய்யும். ஆனால் இம்முறை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றதல்ல. இந்த முறைகளில் ஏதாகிலும் ஒன்றை பின்பற்றினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்