சச்சின் கூட செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த கோலி!!
சச்சின் டெண்டுல்கர் கூட செய்யாத சாதனையை இந்த வருடம் சர்வசாதாரணமாக செய்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஐசிசி சார்பில் 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில்….
இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்…
இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்….
இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்…
என மூன்றையும் ஒரே வருடத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளார் விராட். இதற்கு முன்னதாக இதனை வேறு யாரும் செய்ததில்லை. ஏன் ஆனானப்பட்ட சச்சின் டெண்டுல்கரே இதனை செய்ததில்லை. இதனால் ரசிகர்களும் கிரிக்கெட் உலகமும் இவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறது.