ஆர்கே நகரில் கமல் பின்னணியில் விஷால் போட்டியா?!
நடிகர் சங்க தேர்தல் போதே விஷால் கடும் சவால்களை சந்தித்தார். அவருக்கு முதுகெலும்பாக ஆதரித்தது கமலகாசன் தான். இந்நிலையில் தற்போது கமல் ஜெ-வின் மறைவிற்கு பிறகு ட்விட்டரிலும் நேரடியாக காலத்திலும் தமிழக அரசை குறை கூறி கொண்டிருந்தார்.
தற்போது அவர் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தார். தற்போது ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவதாக ஒரு செய்தி வலம் வர தொடங்கியுள்ளது. திடீரென இந்த செய்தி வந்தவுடன் இதன்பின் யார் இருப்பார் என்ற எண்ணமும் தோற்றியது. அப்போதுதான் கமல் தனது கட்சி தொடங்கும் முன் விஷாலை ஆர்கே நகரில் போட்டியிட வைத்து ஆழம் பார்க்கும் முயற்சியில் உள்ளாரோ என நினைக்க தோன்றுகிறது.
என்ன நடந்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி