பெண்களுக்கு புரதச்சத்து ஏன் மிக அவசியம் என்று தெரியுமா?

Default Image

அதி வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் நமது உடலுக்கும் அதன் ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்துக்களை உணவின் வழியாக எடுத்துக் கொள்கிறோமா இல்லையா என்று சிந்தித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு விரைந்து போய்க் கொண்டிருக்கிறோம். இதனால், பலர் தனது ஆரோக்கியத்தை இள வயதிலேயே இழந்து, 20-30களிலேயே பல வியாதிகளை உடலில் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், உடலின் சத்துக் குறைபாட்டினால் பூப்படைவது முதல் பிள்ளை பெறுவது வரை பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்த பதிப்பில் பெண்களுக்கு புரதச்சத்து என்பது ஏன் மிக அவசியமான ஒன்று என படித்து அறியலாம்.

சமீபத்திய ஆய்வு!

இந்தியாவின் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் 73% பேர் புரதக்குறைபாடு கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 62% கர்ப்பிணிகள் மற்றும் புதிய தாய்மார்கள், 8-15 வயது குழந்தைகளின் அன்னைகளில் 52% பெண்கள், 70-80% வேலைக்கு செல்லும் பெண்கள், 75% ஆண்கள் என இந்தியாவின் இத்தனை சதவிகித மக்களும் புரதக்குறைபாட்டினை கொண்டுள்ளனர்.

இந்த நிலையை மாற்ற மக்கள் புரதச்சத்தினை தங்கள் அன்றாட உணவினில் சேர்த்துக் கொள்ள முயல வேண்டும். இதை அனைவரும் தங்கள் வாழ்வில் செயலாற்ற வேண்டுமானால், அவர்கள் புரதத்தின் அவசியத்தை உணர வேண்டும். வாருங்கள் மனித உடலுக்கு புரதச்சத்தின் அவசியத்தை பற்றி பார்க்கலாம்.

ஹார்மோன் உற்பத்தி மற்றும் அதன் சமநிலை

புரதம் என்ற சத்துக்கள் அமினோ அமிலங்கள் எனும் சங்கிலிகளால் ஆனவை; இந்த சத்துக்கள் உடலில் சரியான அளவில் இருந்தால் தான் உடலால் சரியான மற்றும் ஒழுங்கான முறையில் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் உற்பத்தி செய்த ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும் புரதம் அவசியம்.

என்றும் இளமை!

மனித உடலின் வயதாகுதல் மற்றும் உடலின் மேம்பட்ட வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கு புரதம் என்பது மிக அவசியம். சரியான அளவில் புரதச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் நபர்களால் என்றும் இளமையாக இருக்க இயலும்.

எலும்புகளின் சக்தி மையம்

உடலில் எலும்புகள் என்பவை தான் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும்; ஏனெனில் எலும்புகள் இல்லை எனில் உடலுக்கு குறிப்பிட்ட வடிவம் ஏது?! அத்தகைய எலும்புகளின் வளர்ச்சிக்கும் சக்திக்கும் உதவுவது புரதச்சத்துக்களே!

பசியின்மை

புரதச் சத்துக்களை சரியான அளவில் உண்டு வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தவிர்த்து, உடலை எடை போடுவதில் இருந்து காக்கும். புரத்ச்சத்து நிரம்பிய உணவுகளை உட்கொண்டால், அதிக நேரம் வரை பசியை தாக்குப்பிடிக்க முடியும்.

செய்ய வேண்டியவை!

ஆகையால், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் புரதச்சத்தின் மகிமையை உணர்ந்து அச்சத்து நிரம்பிய உணவுகளை உண்ண முயலுங்கள்; பால், பன்னீர் என பால் சார்ந்த பொருட்கள் அதிக புரதச் சத்துக்களை கொண்டவை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்