100 வருடங்களுக்கு பிறகு முதல் பெண் மேயர் : உ.பி

Default Image

உத்தரபிரதேசத்தில் மாநில நகராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்த பின் அம்மாநில தலைநகர் லக்னோவில் பெண் மேயர் இதுவரை தேர்வு செய்யப்பட்டது இல்லை. இம்முறை லக்னோ மேயர் பதவியானது சுழற்சி முறையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் லக்னோவில்  சன்யுக்தா பாட்டியா என்ற பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 100 வருடங்களுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் மேயராவார்.

லக்னோ மேயர் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதன் காரணமாக அனைத்து கட்சிகளும் பெண் வேட்பாளர்களை முன்நிறுத்தின. பாஜக சார்பில் சன்யுக்தா பாட்டியா, காங்கிரஸ் சார்பில் பிரேமா அவஸ்தி, பிஎஸ்பி சார்பில் புல்புல் கோதியல், ஆபி சார்பில் பிரியங்கா மஹேஷ்வரி  மற்றும் எஸ்பி சார்பில் மீரா வர்தன் ஆகியோர் போட்டியிட்டனர்.

சன்யுக்தா பாட்டியாவின் கணவர் லக்னோ தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அவரது மகன் பிரசாந்த், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.
சன்யுக்தா பாட்டியா1980-ல் இருந்ஜதே பாஜக கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்