அரசியலுக்கும் வரும் எண்ணமில்லை…நடிகர் அஜித் அறிக்கை…!!

Default Image

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வசூல் குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் விஸ்வாசம் .இந்த படம் வெளியான சூழலில் நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா என்று பேசப்பட்டது.குறிப்பாக அஜித் ரசிகர்கள் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.இந்த சூழலில் நடிகர் அஜித் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் அஜித் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் அவர் ,  நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் என்னுடைய திரைப்படத்தில் அரசியல் சாயம் வரக்கூடாது என தீர்மானமாக இருக்கின்றேன். என்னுடைய தொழில் நடிப்பது மட்டுமே என்று தெளிவாக இருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சராசரியாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்னுடைய ரசிகர்களிடமும் நான் யாருக்கு ஆதரவு , யாருக்கு வாக்களியுங்கள் என்று கூட கூறியது கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்