மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விஸ்வாசம் மற்றும் பேட்ட பட டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைந்துள்ளது !!

Default Image

கடந்த 10 ந் தேதி மிக பிரம்மாண்டமாக வெளி வந்த இரண்டு முக்கிய திரைப்படங்கள் பேட்ட, விஸ்வாசம். இந்த படங்கள் கடும் போட்டிக்கு நடுவில் திரைக்கு வந்து தற்போது இரு படங்களும் வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் செம்ம மாஸாக கொண்டாடினர்.

தற்போது இந்த திரைபடங்கள் வெளியாகி 11 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் விலை  குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள  மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த இரு படங்களின் டிக்கெட் விலையும் குறைந்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் ஸ்ரீதர்பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் வரி உட்பட ரூ.190 க்கு விற்கப்பட்ட டிக்கெட் கட்டணம் இன்று முதல் ரூ.150க்கு விற்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்