சம்பளத்தை வட்டியுடன் கொடுக்குமாறு தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பிய மேஜிக் மேன் !!

Default Image

கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்’ மெர்சல் ‘ படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இந்த படத்தின்  மேஜிக் மேன் ராமன் சர்மா. இவருக்கு  சம்பளதொகையாக ரூ 4லட்சம் வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம்  ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் படம் வெளி வந்த போது ஒரு சிறுதொகையை மட்டும் தயாரிப்பாளர் வழங்கியுள்ளார்.

மேலும் இந்த படம் வெளி வந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில்  இந்த படத்தின்  மேஜிக் மேன் ராமன் சர்மாவின் சம்பளத்தொகையை தயாரிப்பாளர் வழங்க வில்லை என ராமன் தற்போது  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் வட்டியுடன் சம்பளத்தொகையை வழங்குமாறு ராமன் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்