ஜெ. மரணம்: விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரமாக விசாரணை
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 6 மணி நேரமாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டிசம்பர் 18 ஆம் தேதி , ஜனவரி 7 ஆம் தேதிகளில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகவில்லை.மேலும் 3-வது முறையும் அவர் ஆஜராகவில்லை.
இன்று ஒருவழியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்:
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.
அதில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 6 மணி நேரமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் ஆஜராகி அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து வருகிறார்.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.