அடடே இதை சாதாரணமாக நெனச்சீராதீங்க….!! இந்த இலையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

Default Image

வெற்றிலை பல மருத்துவகுணங்கள் கொண்டது. இதனுடைய பச்சை நிறம் மூலிகை செடியின் அம்சத்தை குறிக்கும். வெற்றிலையில் கால்சியம், இரும்புசத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். வெற்றியின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

Image result for வெற்றிலை

மருத்துவ குணங்கள் :

வயிற்று வலி :

இரண்டு தேக்கரண்டி அளவு சீரகத்தினை மைபோல் அரைத்து, மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி, 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்த கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.

Image result for வயிற்று வலி :

ஒவ்வொரு வெற்றிலையையும்  வதக்கிய பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மற்றும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி: 

Related image

வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலியில் இருந்து பூரண விடுதலை அடையலாம்.

தேள் விஷம் :

Related image

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகு வைத்து மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலையை ஒரு கைப்பிடியளவும் மற்றும் அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவும் எடுத்து, ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.

Image result for சர்க்கரை நோய் :

தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து 50 மிலி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் சர்க்கரை நோயிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.

நுரையீரல் :

Related image

நுரையீரல் பலப்பட வெற்றிலை சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாமல் பாதுகாக்கிறது.

அஜீரண கோளாறுகள் :

Related image

வெற்றிலையுடன் மிளகு சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்