சிற்ப கலைக்கே சிம்மசானம் போட்டு.! சவால் விடும் சிவக் கோவில்..!!வரலாற்று பொக்கிஷம்..!தரிசித்து உள்ளீர்களா..??

Default Image

நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும்.

இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

Image result for இரணியூர் ஆட்கொண்டநாதர்

கி.பி 713 ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை  வணங்கினான்.

Related image

ஈசனும் சிங்க முகமும் ,மானிட உடலும் ,மிருகத்தின் காலும்,வாலும், பறவையின் இறக்கையும், இணைந்த வீரசபேஸ்வராய் உருவெடுத்து நரசிம்மரை ஆட்கொண்டு சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு.

Related image

இதனால் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசனை ஆட்கொண்ட நாதர் என்றும் இரணிஸ்வரன்  என்றும் அழைக்கப்படுகிறார்.ஆட்கொண்ட நாதரால் இத்திருத்தலத்தில் நரசிம்மர் குளிச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார்.இக்கோவில் உள்ள தூண்களில் கலை நயமிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் இச்சிற்பங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.

ஆட்கொண்ட நாதர் சுயம்பு மூர்த்தியாக  காட்சியகிக்கிறார்.இக்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம்.

Related image

நடை  அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Related image

இவற்றுள் அம்பாள் முன் உள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்ப வல்லுனர்களால் போற்றும்  பொக்கிஷமாய் திகழ்கிறது.

Related image

பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள  சிற்பத்தில் காட்சியாளிக்கிறார்.இரணியூர் கோவிலில்  உள்ள குபேரர் தன் வாகனமான குதிரையில் உள்ளபடி கட்சியாளிக்கிறார்.மேலும் இங்கு தமிழ் வருடப் பிறப்பின்றும் ,அட்சய திருத்தி அன்றும் குபேர பூசையானது நடைபெறும்.

Related image

வரலாற்று சிறப்பு மிக்க கலைநய மிக்க கற்சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினை  அதிகமான பக்தர்களும் , சுற்றுலாப் பயணிகளும் கோடை விடுமுறை நாட்களில் காண வருகின்றனர்.

Related image

ஆட்கொண்ட நாதரை தரிசித்து விட்டு அங்கு ஒவ்வொரு தூணிலும்  செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு வியக்கின்றனர்.சிற்ப கலையில் முன்னோர்களின் செயல்மிகு திறனை ரசிக்கின்றனர்.

Related image

இத்தகைய சிறப்புக்கு சொந்தமான கோவிலானது சிவகேங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் இந்த ஊரானது திருப்பத்தூர் இருந்து சுமார் 13 கீ.மீ தொலையில் உள்ளது.சென்று  ஆட்கொண்ட நாதரையும் ,அழகிய சிற்பங்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்