யாகம் நடத்தியதற்காக என்ன ஆதாரம் இருக்கிறது..அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி…!!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் , விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் , திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , நாங்கள் யாகம் நடத்துவதாக யார் பார்த்தது.யாகம் நடத்தியதாக கூறப்படுவதற்கான எந்த ஆதாரம் இருக்கின்றது .எந்த ஆதாரமும் இல்லாமல் வதந்திகளை பரப்பும் நிலையில் அதற்கான கருத்துக்களை கூற முடியாது.எனவே இது தவறான் கருத்து .திட்டமிட்டு பரப்படவும் வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்