கடல்சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல்சீற்றத்தின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் கடல் சீற்றத்தின் காரணமாகவும் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகளின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பகுதியில் துண்டில் வளைவு ஏற்படுத்தி தரவும் கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.