” தலைமை செயலகத்தில் யாகம் ” ஜெயலலிதா சமாதியில் நடத்துங்கள்..முக ஸ்டாலின் கண்டனம்…!!
இன்று சென்னையில் திமுக நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் , தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்துகின்றார்.
மேலும் பேசிய அவர் தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்த இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது.இவர்கள் யாகத்துக்கு செய்யும் பணம் மக்களின் வரி பணம்.யாகம் நடத்தும் இடம் அரசாங்கம் இடம் .தலைமை செயலகத்தில் யாகம் நடத்துவது சட்டத்தை மீறும் செயல்.யாகம் நடத்த வேண்டுமென்றால் ஜெயலலிதா சமாதியில் யாகம் நடத்து.கோட்ட்டையில் யாகம் நடத்துவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்