ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் :பிரதமர் மோடி அப்படி சொல்லவில்லை-தமிழக பாஜக தலைவர் தமிழிசை
ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்டாலின் தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டேன் என்று சொன்னவர். அவரை பெங்காலி மொழியை பேச வைத்து உள்ளார் மோடி. பெரியாரை பற்றி பேசியவர் விவேகானந்தர் பற்றி பேசியுள்ளார்.
மாநில சுயாட்சி பற்றி பேசி ஸ்டாலின் ஒன்றுப்பட்ட இந்தியா என்று பேச வைத்தது தான் மோடியின் சாதனையாகும். ஒன்றுப்பட்ட இந்தியாவை கொண்டு வருவதாக கூறும் மகா கூட்டணி உருப்பெறமுடியாத கூட்டணியாகும். இந்த கூட்டணி கருவிலேயே கலைய உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.