மற்ற ரக கார்களுடன் மல்லுக்கட்ட வருகிறது மகேந்திரா…!!! மல்லுக்கட்டில் மற்ற நிறுவனங்களை மன்னை கவ்வ வைக்குமா? மகேந்திரா?…!!!!
இந்தியாவில் தற்போது பல ரக கார்கள் அறிமுகமாகி வருகிறது.இந்நிலையில் மகேந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய ரக மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட 8000 ருபாய் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17-இன்ச் அலாய் வீல், டி.ஆர்.எல்., ஃபாக்ஸ் லெதர் சீட் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில மகேந்திரா விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டன.
இந்நிலையில் மகேந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் இதில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்கள் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் கூடிய விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகேந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற பல தரப்பட்ட நிறங்களில் கிடைக்கிறது. மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் [இது எக்ஸ்-ஷோரூமை சார்ந்து ] முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் [எக்ஸ்-ஷோரூமை சார்ந்து ) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செய்தி வாகன பிரியர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
DINASUVADU.