செல்ல பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமுடையவரா நீங்கள்…!!! அப்ப கண்டிப்பா இதை படிங்க…!!!
மனித வாழ்வில் செல்லப்பிராணிகளும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதிகமாக அனைத்து வீடுகளிலும் ஏதாவது ஒரு செல்ல பிராணிகள் வளர்ப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிகமானோரால் விரும்பி வளர்க்கப்படுகிற செல்லப்பிராணி என்னவென்றால் அது நாய் தான். நாய்களிலேயே பல வகைகள் உள்ளது.
செல்லப்பிராணிகள் :
நன்றியுணர்வில் நாய்களுக்கு ஈடு, இணை எந்த உயிரினமும் கிடையாது. ஆனால், மனிதனின் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, நாய் வளர்ப்பின் பராமரிப்பு முறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நாய்களின் உடலில் காணப்படுகிற அலர்ஜிக்குக் காரணமான சாதாரண உண்ணி தொடங்கி, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரேபீஸ் வைரஸ்தான் இதற்கு காரணமாக அமைகிறது.
நாயின் முடியால் மனிதனுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுவது இல்லையென்றாலும், தூசு, உண்ணி(ஒவ்வாமையை ஏற்படுத்துகிற ஒருவகை பூச்சி) ஆகியவை இம்முடியினுள் மறைந்து கிடக்கின்றன. அலர்ஜி காரணமாக, பலவிதமான விளைவுகள் உண்டாகும்போது, உணர்ச்சிகளுக்கு எளிதாக ஆட்படும் பலவீனமான மனிதனின் நோய் எதிர்ப்பு திறன் எந்தவிதமான பிரச்னைகளையும் ஏற்படுத்தாத புரதத்தில் இயல்புக்கு மாறாக செயல்படத் தொடங்குகிறது. பல்வேறுவிதமான நாய் இனங்கள், வெவ்வேறு வகையான உண்ணிகளை உற்பத்தி செய்கின்றன.
பூனை, நாய் முதலான வளர்ப்பு பிராணிகளால் ஏற்படுகிற அலர்ஜியின் தாக்கம் வீடு மட்டுமில்லாது வெளியிடங்களில் காணப்படும். வீடுகளில் பராமரிக்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டும் இதற்கு காரணம் அல்ல. ஏனென்றால், மக்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் மூலம், ஒவ்வாமையைப் பல்வேறு இடங்களுக்குப் பரவச் செய்கின்றனர்.
செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள் :
வளர்ப்பு பிராணிகளால், நமது உடலில் ஏற்படுகிற வீக்கம், மூக்கின் உட்பகுதிகளில் அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு, தோல் சிவந்து காணப்படுதல்(நாய் நக்குவதால் ஏற்படுதல்), இருமல், மூச்சுத்திணறல், முகம், கழுத்து மற்றும் மார்பு ஆகிய இடங்களில் தடித்தல்(Rashes), கடுமையான ஆஸ்துமா பாதிப்பு(எளிதாக ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்கள்) போன்ற ஒவ்வாமையைச் சில அறிகுறிகளால் தெரிந்து கொள்ள முடியும்.
வளர்ப்பு பிராணிகளால் ஏற்படுகிற அரிப்பு, தடிப்பு முதலான ஒவ்வாமையின் தாக்கத்தை அறிந்துகொள்ள, முறையான பரிசோதனைகள் மேற்கொள்வதன்மூலம், தேவையான சிகிச்சை முறைகளை அறிதல்.
- அலோபதி சிகிச்சை முறைகள் மட்டுமில்லாமல், நாய் முதலான ‘செல்லங்கள்’ ஏற்படுத்துகிற அலர்ஜியைக் குணமாக்க, உப்பு நீர் கரைசல் போன்ற இயற்கை வைத்திய முறைகளும் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளல்.
- வளர்ப்பு பிராணிகளுடன் வாக்கிங் போதல், விளையாடுதல் என பல மணிநேரம் செலவழித்தபின்னர், மறக்காமல் ஆடைகளை மாற்றல்.
- அலர்ஜி மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மருத்துவரிடம் பேசுதல்.